Sunday 28th of April 2024 09:19:33 AM GMT

LANGUAGE - TAMIL
-
பிரான்ஸில் மற்றொரு தாக்குதல்;  பாதிரியார் ஒருவா் சுடப்பட்டார்!

பிரான்ஸில் மற்றொரு தாக்குதல்; பாதிரியார் ஒருவா் சுடப்பட்டார்!


பிரான்ஸ் - லியான் நகரில் தேவாலய பாதிரியார் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து அவரை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டது. அதன்பின் நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களை கொண்டு சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் இந்தத் தாக்குதலுக்காக காரணம் தெரியவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொலை முயற்சி என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, லியான் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவ இடத்தில் இருந்தவா்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் கைது செய்யப்படும்போது அவரிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை. அவரின் அடையாளத்தை கண்டறிய அதிகாரிகள் முயற்சித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயிற்றில் இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில் நிக்கோலஸ் ககவெலகிஸ் என்ற பாதிரியார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரான்ஸின் நீஸ் நகரில் இரண்டு நாட்களுக்கு முன் தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்.

இம்மாத ஆரம்பத்தில் பாரிஸ் நகரின் வட மேற்கு பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர் தலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

முகமது நபிகளின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்களைத் தனது மாணவர்களிடத்தில் காட்டி பாடம் நடத்தியதன் பின்னணியில் அவா் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிரான்ஸில் அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் தொடர் வன்முறைச் சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இத்தாக்குதல்களை இஸ்லாமிய மிதவாத தீவிரவாதிகளின் செயல் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனா விமர்சினம் செய்தார். இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு பிரான்ஸில் இடமில்லை எனவும் அவர் கூறினார்.

அவரது இந்தக் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE